உக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம்! இந்த ராசில உங்க ராசி இருக்க?

SHARE:

ஜோதிடம் என்பது நம்மை பற்றிய ஒவ்வொரு விஷயங்களையும் தெளிவாக கூற கூடிய ஒன்றாக உள்ளது. இதன் படி நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி நடந்...



ஜோதிடம் என்பது நம்மை பற்றிய ஒவ்வொரு விஷயங்களையும் தெளிவாக கூற கூடிய ஒன்றாக உள்ளது. இதன் படி நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி நடந்து கொள்வீர்கள், உங்களது தினசரி வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை எப்படி சந்திப்பீர்கள் என்பதை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
ராசிப்படி ஒருவரது அறிவுத்திறன் எப்படி இருக்கும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.
நாம் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான அறிவு திறனை கொண்டிருப்பது இல்லை. இந்த அறிவுத்திறனானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் அறிவாளிகளாகவும் திறமைசாலிகளாவும் இருப்பார்கள்..
அதற்காக மற்றவர்கள் அறிவாளிகள் இல்லை என்பது இல்லை.. அனைவருமே ஒரு சில விசயங்களில் சிறந்தவர்களாக தான் இருப்பார்கள். இந்த பகுதியில் ராசியின் அடிப்படையில் மிகச்சிறந்த அறிவாளிகள் யார் என்பது பற்றியும், அவர்கள் எந்த விஷயத்தில் அறிவாளிகள் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அது மாத்திரம் அல்ல இவர்கள் அனைவரும் கோவம் என்று வந்தால் உச்சத்தில் தான் இருப்பார்களாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அறிவுத்திறன் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள். தங்களை ஏமாற்றுபவர்கள் மற்றும் மற்றவர்களது மனதில் என்ன தீய குணம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி எல்லாம் முழுமையாக அறிந்தவர்களாக இருப்பார்கள்.
  • சமாதான குணம்
இவர்கள் தங்களது சொந்த அறிவின் படி செயல்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். அதன் மூலம் என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களை எளிதில் சாமதானம் செய்து விடும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த அரசியல்வாதியாக இருப்பார்கள்.
மிதுனம்
இவர்கள் அறிவுத்திறன் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் பல திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிரச்சனையின் ஒரு புறம் மட்டுமே பார்க்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
  • பல வேலைகளை செய்பவர்கள்
அதுமட்டுமின்றி இவர்களது மிகச்சிறந்த திறமை என்ன என்றால், பல பிரச்சனைகளை ஒரே சமயத்தில் தீர்த்து வைக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவரை பார்த்தே அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சீக்கிரமாக கேள்விகளுக்கு பதிலளிப்பவர்களாக இருக்கிறார்கள்.
மீனம்
இந்த ராசிக்காரகள் உணர்ச்சிபூர்வமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் உணர்வு ரீதியாக மற்றவர்களை புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். தங்களது உணர்வுகளை வெளிப்படையாக வெளிக்காட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள்.
  • உணர்வுபூர்வமானவர்கள்
இந்த மீன இராசிக்காரர்கள் தங்களை சுற்றி ஏதேனும் ஒரு தவறு நடந்தால் அதை சீக்கிரமாக இனம் கண்டு கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களது ஆறாம் அறிவானது இவர்கள் ஒரு சில கடினமான சூழ்நிலைகளை கையாழ்வதற்கும், ஆபத்துக்களில் தப்பிக்கவும் உதவியாக இருக்கும்.
கன்னி
இந்த ராசிக்காரர்கள் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளை கூட சுலபமாக கையாழ்வது எப்படி என்பது பற்றி அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் ஒரு முடிவில் ஒரு படி எடுத்து வைக்கும் முன்னர் அதனை சுற்றி உள்ள அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து அதன் பின்னர் தான் முடிவு எடுப்பார்கள்.
  • தீர்வு காண்பார்கள்
இவர்கள் தங்களது சொந்த பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். இவர்கள் முதலீடுகள் செய்வதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் பயம் அறியாதவர்கள் என்று சொல்லலாம்.
கும்பம்
இந்த ராசிக்காரர்கள் சிறந்த புரிதல் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சூழ்நிலைகளையும், அந்த சூழ்நிலையில் இரு தரப்பினர்களும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது பற்றி முழுமையான புரிதலுடன் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை கேட்க கூடிய திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
  • அறிவு
இவர்கள் புத்திசாலித்தனம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களை அலசி ஆராய்ந்து படித்து தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் ஆழமான அறிவு திறமை இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில் மிகச்சிறந்தவர்களாக இருப்பார்கள். ஏதேனும் சந்தேகம் மற்றும் பிரச்சனைகள் என்றால் அனைவரும் இந்த ராசிக்காரர்களிடம் வந்து தங்களது சந்தேகம் மற்றும் பிரச்சனைக்கான தீர்வுகளை கேட்பார்கள்.
இவர்களது பதில் மற்றவர்களை திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுத்த தெரிந்தவர்கள் இவர்கள்.

Name

Comedy,1,Comman News,2,English Tech News,32,Learning,2,Sports,8,Tamil news,1,Tech News,21,update,128,ஆன்மிக தகவல்,5,கல்வி,1,சினிமா,51,செய்திகள்,424,தகவல்,6,தகவல் தொழிநுட்பம்,20,மருத்துவம்,34,ராசிபலன்,3,வா‌ஸ்து,1,விளையாட்டு,76,ஜோதிடம்,22,
ltr
item
Help full News: உக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம்! இந்த ராசில உங்க ராசி இருக்க?
உக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம்! இந்த ராசில உங்க ராசி இருக்க?
https://1.bp.blogspot.com/-YAlLNspTwsg/XJc5mUdffJI/AAAAAAAAAzw/_QzrzdLVxKIeQ4KEQl-UQ7tkTDd3Z6zbACLcBGAs/s640/daily-rasi-palan-tamil-1544071531.jpg
https://1.bp.blogspot.com/-YAlLNspTwsg/XJc5mUdffJI/AAAAAAAAAzw/_QzrzdLVxKIeQ4KEQl-UQ7tkTDd3Z6zbACLcBGAs/s72-c/daily-rasi-palan-tamil-1544071531.jpg
Help full News
http://www.helpfullnews.com/2019/03/6_24.html
http://www.helpfullnews.com/
http://www.helpfullnews.com/
http://www.helpfullnews.com/2019/03/6_24.html
true
3058881042743585899
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy