நாட்டிற்குள் நீதி நிலைநாட்டப்படவில்லை எனில் சர்வதேசத்திற்கு செல்லும் உரிமை இருக்கின்றது

SHARE:

sarath fonseka,srilanka,srilankan tamil,srilanka problem,srilankan goverment,unp


உள்நாட்டில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றால், எந்த பிரஜையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை சர்தேசத்திற்கு கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு உள்நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு அரசியல்வாதிகள் அதற்கு எதிராக செயற்படுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
களனி பொல்ஹேங்கொட பிரதேசத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சர்வதேச நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொன்சேகா,
பாதுகாப்பு படைகளில் குற்றம் செய்தவர்கள் இருந்தால், தேசிய நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்க முடியும். கடந்த காலங்களிலும் அப்படி நடந்துள்ளது. கடந்த காலங்களில் குற்றம் செய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் விசாரணைகளை நடத்தாது அரசியலில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
குற்றம் செய்தவர்கள் ஓரிருவர் இருக்கின்றனர். அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். கிறிஸாந்தி குமாரசுவாமி, மன்னம்பேரி போன்ற பெண்களின் கொலையுடன் சம்பந்தப்பட்ட இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால், குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும். அதனை செய்யாத காரணத்தினால், சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றது. வடக்கில் உள்ள மக்கள் அவர்களின் அரசியல்வாதிகளுக்கு இது சம்பந்தமாக அழுத்தங்களை கொடுத்திருத்திருக்கலாம்.
இந்த விடயத்தில் அரசியல் தலையீடு இன்றி குற்றம் செய்தவர்களுக்கு சட்டத்தை அமுல்படுத்தினால், இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போருக்கு பின்னர் நடந்த குற்றங்கள் தொடர்பானவை. யுத்தம் நடந்த போது செய்த குற்றங்கள் அல்ல.
போர் நடைபெற்ற போது குற்றங்களை செய்ய எவருக்கும் நேரம் இருக்கவில்லை. போர் முடிந்த பின்னர் நான் இராணுவத்தில் இருக்கவில்லை. போருக்கு பின்னர் பெரும் எண்ணிக்கையிலானோர் சரணடைந்தனர்.
அவர்களில் சிலருக்கு ஏதிராக குற்றமிழைத்ததாகவே குற்றம் சுமத்தப்படுகிறது. போர் நடைபெற்ற நேரத்தில் அப்படியான குற்றங்கள் நடந்திருந்தால், நான் 24 மணி நேரத்தில் தண்டனை வழங்கியிருப்பேன். அரசாங்கம் தண்டிக்கும் வரை நான் காத்திருக்கவும் மாட்டேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். நாட்டில் நீதி நிலை நாட்டப்படவில்லை என்பதே இது காட்டுகிறது. உள்நாட்டில் நீதி கிடைக்காது போனால், எந்த பிரஜையாக இருந்தாலும் அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல முடியும். அதனையே சுமந்திரன் பேசுகிறார் எனவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Name

Comedy,1,Comman News,2,English Tech News,32,Learning,2,Sports,8,Tamil news,1,Tech News,21,update,128,ஆன்மிக தகவல்,5,கல்வி,1,சினிமா,51,செய்திகள்,424,தகவல்,6,தகவல் தொழிநுட்பம்,20,மருத்துவம்,34,ராசிபலன்,3,வா‌ஸ்து,1,விளையாட்டு,76,ஜோதிடம்,22,
ltr
item
Help full News: நாட்டிற்குள் நீதி நிலைநாட்டப்படவில்லை எனில் சர்வதேசத்திற்கு செல்லும் உரிமை இருக்கின்றது
நாட்டிற்குள் நீதி நிலைநாட்டப்படவில்லை எனில் சர்வதேசத்திற்கு செல்லும் உரிமை இருக்கின்றது
sarath fonseka,srilanka,srilankan tamil,srilanka problem,srilankan goverment,unp
https://1.bp.blogspot.com/-UP7olLDS2DU/XJeryjOsd7I/AAAAAAAAA0c/lM3y4zKoPk0ydL3stVu2mhvLPlo70A02QCLcBGAs/s640/sarath-fonseka-newsfirst.jpg
https://1.bp.blogspot.com/-UP7olLDS2DU/XJeryjOsd7I/AAAAAAAAA0c/lM3y4zKoPk0ydL3stVu2mhvLPlo70A02QCLcBGAs/s72-c/sarath-fonseka-newsfirst.jpg
Help full News
http://www.helpfullnews.com/2019/03/blog-post_155.html
http://www.helpfullnews.com/
http://www.helpfullnews.com/
http://www.helpfullnews.com/2019/03/blog-post_155.html
true
3058881042743585899
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy