இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் கோமதிக்கு உற்சாக வரவேற்பு


ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் தங்க மகள் கோமதி.
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த கோமதிக்கு, சிறுவயதில் இருந்து தடகளப்போட்டியில் ஆர்வம் இருந்த காரணத்தால் கடும் போராட்டத்திற்கு மத்தியில் சாதித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நாடு திரும்பிய கோமதிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி குறித்து கோமதி கூறியதாவது, நான் தங்கம் வென்றுள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த போட்டியில் இரண்டாவது, அல்லது மூன்றாவது இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கையில் ஓடினேன், ஆனால் கடைசி 15 மீட்டர் இருக்கையில் தான் என்னால் ஓட முடியும் என்ற உத்வேகம் வந்து எனது ஓட்டத்தை அதிகப்படுத்தி முதல் இடத்தை பிடித்தவுடன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.
தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பெங்களூர் வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் எனக்கு அலுவலகத்திலும் சற்று பிரச்சனை இருந்தது. பயிற்சியின்போது காலிலும் அடிபட்டது, இருப்பினும் விடாமுற்சியால் போட்டியில் கலந்துகொண்டேன்.
அடுத்ததாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்தவிரும்புகிறேன் என கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்