அந்த தமிழக வீரர் அவசியம் இந்திய உலகக்கோப்பை அணிக்கு தேவை! சவுரவ் கங்குலிஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் அவசியம் தேவை என முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

மே 30ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்திய அணி 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை அறிவித்தது. இந்த அணிக்கு விராட் கோஹ்லி அணித்தலைவராக செயல்பட உள்ளார்.

இந்த அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஷங்கர் என 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர். ஆனால், உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்திற்குள்ளானது.


இந்நிலையில், தமிழக வீரரான விஜய் ஷங்கர் இந்திய அணியில் அவசியம் தேவை என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

‘இளம் வீரர் விஜய் ஷங்கர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவசியம் தேவை. அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அந்த திறமையின் அடிப்படையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தவிர, இங்கிலாந்து ஆடுகளத்தில் விஜய் ஷங்கர் நிச்சயமாக பவுலிங்கிலும் கைகொடுப்பார்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்