ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து பிரதமர் ரணில் வெளிப்படுத்திய முக்கிய தகவல்!

SHARE:

மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்கு கொண்டுவருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார...


மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்கு கொண்டுவருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்யொன்றை விடுத்து பிரதமர் உரையாற்றினார்.

இதன் போது தொடர்ந்தும் பேசிய பிரதமர், “நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயித்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை முன்னெடுப்போர் பற்றியும் விசாரணைகள் இடம்பெறுகிறது. கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2014ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து சிரியா சென்ற ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. துருக்கி ஊடாக இவர்கள் சிரியா சென்றிருக்கிறார்கள்.

மொஹமட் முஹ்ஸீன் இஷாக் அஹமட், மொஹமட் உனைஸீன் மொஹமட் அமீன், மொஹமட் சுவைர் மொஹமட் அறூஸ் ஆகியோர் இலங்கையிலிருந்து சிரியா சென்றவர்களாவர்.

ஐஎஸ் இராஜ்யம் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானுக்குச் சென்று, ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் இலங்கை திரும்பினார்களா என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல் ஹக் என்பவர் 2014ஆம் ஆண்டில் சிரியா சென்று ஆயுதப் பயிற்சியை பெற்றவராவார்.

தெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்து கொண்ட அப்துல் லத்தீப் மொஹமட் ஜமீல் என்பவர் 2014ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்புடன் இணைந்து கொள்வதற்காக சிரியாவுக்குள் நுழையும் நோக்கில் துருக்கி சென்றிருந்தார்.

ஆனால், அவர் அங்கு செல்லாது மீண்டும் நாடு திரும்பியிருக்கின்றார். ஐஎஸ் அமைப்புக்காக கொலை செய்யப்பட்ட முதலாவது இளைஞர் மொஹமட் மூஹ்ஸின் சப்ராஸ் நிலாம் என்பவராவார் என்றும் பிரதமர் கூறினார்.

இலங்கையிலிருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இவர்கள் தமது பெற்றோரையும் துருக்கி ஊடாக சிரியாவிற்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார்கள்.

ஆனால், இவர்கள் இருவரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி இலங்கை திரும்பியிருக்கிறார்கள். பெற்றோரின் செயற்பாடுகள், அவர்கள் தொடர்பு வைத்திருப்பவர்கள் ஆகியோர் பற்றி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கும், முற்றாக அங்கவீனம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுவாபிட்டிய, மட்டக்களப்பு, கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்ட 100 பேரின் குடும்பத்தவர்களுக்கும், காயமடைந்த 40 பேருக்கும் முதற்கட்ட இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Name

Comedy,1,Comman News,2,English Tech News,32,Learning,2,Sports,7,Tamil news,1,Tech News,21,update,128,ஆன்மிக தகவல்,4,சினிமா,50,செய்திகள்,368,தகவல்,6,தகவல் தொழிநுட்பம்,17,மருத்துவம்,34,ராசிபலன்,2,வா‌ஸ்து,1,விளையாட்டு,70,ஜோதிடம்,21,
ltr
item
Help full News: ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து பிரதமர் ரணில் வெளிப்படுத்திய முக்கிய தகவல்!
ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து பிரதமர் ரணில் வெளிப்படுத்திய முக்கிய தகவல்!
https://2.bp.blogspot.com/-ZDXtL5abigc/XNI4mgaxidI/AAAAAAAABks/iUj0H638tRAFVjogQEl3uk9zwEzqCpCGACLcBGAs/s320/ranil.jpg
https://2.bp.blogspot.com/-ZDXtL5abigc/XNI4mgaxidI/AAAAAAAABks/iUj0H638tRAFVjogQEl3uk9zwEzqCpCGACLcBGAs/s72-c/ranil.jpg
Help full News
http://www.helpfullnews.com/2019/05/blog-post_75.html
http://www.helpfullnews.com/
http://www.helpfullnews.com/
http://www.helpfullnews.com/2019/05/blog-post_75.html
true
3058881042743585899
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy