தவறு செய்த ரோஹித் ஷர்மா... 12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!


மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவிற்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், மும்பை அணி போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தை விட பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காதது, ஐ.பி.எல் விதிகளின்படி தவறாகும்.
எனவே, அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
2019 ஐ.பி.எல் டி20 தொடரில் மும்பை அணி இழைக்கும் முதல் தவறு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்