13வது திருத்தச்சட்டத்தை மீண்டும் கையில் எடுத்த இந்தியா !


சிறிலங்கா அரசாங்கம் 13வது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா ஆணையளரது சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையின் விவாதத்தின் போதே, இந்திய பிரதிநிதி ரஜீவ் கே சந்தர் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.
ஒற்றையாட்டியுடன் கூடிய அரசியலமைப்பு மறுசீர்த்திருத்தம் ஊடான இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்து வரும் நிலையில் இக்கருத்து வெளிவந்துள்ளது.
மேலும் இந்தியப் பிரதிநிதி ரஜீவ் கே சந்தர் தெரிவிக்கையில், நெருக்கமான அண்டை நாடான சிறிலங்காவின் நிலைமைகளில் இருந்து இந்தியா விலகியிருக்க முடியாது.
ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவமான, நீதியான, அமைதியான, கௌரவமாக வாழும் வகையில், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரதும், அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக, பல இன, பல மொழி, பல சமய, சமூக சிறிலங்காவின் குணவியல்பை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வந்துள்ளது.
சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்கிறோம்.
சிறிலங்கா அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய, ஏனைய முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்