2 வாரத்திலே உடல் எடையை குறைக்கும் துளசி.. இப்படி குடியுங்கதற்போது உடல் எடையினை குறைக்க எவ்வளவே வழிகள் இருந்தாலும் ஆயுர்வேத முறையில் உடல் எடையினை குறைப்பது நன்மை என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதிலும் அந்தகாலத்திலிருந்து துளசி இலைகள் உடல் எடையை குறைப்புக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகின்றது.
துளசி உடல் எடையை குறைத்து, ஹார்மோன் குறைபாட்டை தீர்க்கின்றது. ஏனெனில் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தான் முக்கிய காரணம்.
துளசி உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை முழுவதுமாக இது நீக்கி விடும். அத்துடன் கொலஸ்ட்ராலையும் நீக்க கூடிய பண்பு இதற்குண்டு.
மேலும் துளசி இலைகளில் டீ போட்டு குடிப்பதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளி தருகின்றது. உடல் எடையிழப்பு சிறந்த தீர்வாக அமைகின்றது. தற்போது அந்த டீயை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
  • துளசி இலைகள் 6
  • துளசி விதைகள் 2 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
  • புதினா இலைகள் 4
  • தேன் (தேவைக்கு)
தயாரிப்பு முறை
1 கப் நீரை கொதிக்க விட்டு அதில் துளசி இலைகள், துளசி விதைகள், ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். அதன் பின் இந்த நீரை வடிகட்டி கொண்டு அதில் எலுமிச்சை சாறு,
நறுக்கிய புதினா இலைகள், தேன் கலந்து குடித்து வரலாம்.
இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடனே உடல் எடையை குறைத்து விடலாம்.
துளசியை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் தொல்லை நீங்கும். எனவே, விரைவில் இதய நோய்களையும் இது குணப்படுத்தும். அத்துடன் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க இந்த அருமையான மூலிகை டீ பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்