இந்தியா பாகிஸ்தான் 2019 உலகக்கோப்பையில் மோதுமா? ஐசிசி அதிரடி அறிவிப்பு


உலகக்கோப்பை தொடர் வரும் மே மாத இறுதியில் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடாது என்ற பேச்சுக்கள் இருக்கிறது. காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்த தீவிரவாத தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியாகினர். அதை தொடர்ந்து இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.


 கடிதம் அது தொடர்பான விவாதங்கள் பெரிய அளவில் நடந்த நிலையில், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிசிசிஐ, மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறது. இதற்கிடையே ஐசிசி-க்கு எழுதிய கடிதத்தில், தீவிரவாதம் உருவாகும் நாடுகளுடன், மற்ற நாடுகள் கிரிக்கெட் ஆடக் கூடாது என கேட்டுக் கொண்டது.


நடந்தே தீரும்? இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் ஜூன் 16 அன்று நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி நடந்தே தீரும் என்ற தொனியில் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கருத்து கூறியுள்ளார்.

உடன்படிக்கை "ஐசிசி தொடர்களில் பங்கேற்க அனைத்து நாடுகளும் உறுப்பினர் பங்கேற்பு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுள்ளனர். அதன்படி, ஒரு தொடரின் அனைத்து போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்க வேண்டும்" என ரிச்சர்ட்சன் தெரிவித்தார்


புறக்கணிக்க வேண்டும் ஒருவேளை இந்த உடன்படிக்கைபடி ஒரு நாடு நடந்து கொள்ளவில்லை என்றால், எதிரணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். இந்திய முன்னாள் வீரர்கள் சிலர் அந்த இரண்டு புள்ளிகள் போனாலும் பரவாயில்லை, இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியா போட்டியை புறக்கணிக்காது என ஐசிசி கருதுவதாக தெரிகிறது.கருத்துரையிடுக

0 கருத்துகள்