2019 ஐபிஎல் தொடர்: லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை விபரம் வெளியீடு!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முழுமையான லீக் போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ வெளியிட்டது.
12வது ஐ.பி.எல் டி20 போட்டிகள் மார்ச் 23யில் துவங்குகிறது. தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலான போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எஞ்சிய அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
மே 5ஆம் திகதி வரை 56 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. நாக்-அவுட் சுற்றுப் போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில், நாக்-அவுட் போட்டியின் முதல் குவாலிபயர் போட்டி மே 7ஆம் திகதி நடைபெறும் என்றும், இறுதிப்போட்டி மே 12ஆம் திகதி சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், தவிர்க்க முடியாத காரணத்தால் போட்டிகள் வேறு இடத்தில் நடத்த வேண்டியிருந்தால், விசாகப்பட்டினத்தை தயாராக வைத்திருக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்