40 வேட்பாளர்கள்.. 20 பெண்கள்.. 20 ஆண்கள்.. அதிர வைக்கும் நாம் தமிழர்.. இன்று அசத்தல் அறிமுகம்!


நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூரில் இன்று மாலை நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் "கரும்பு விவசாயி" சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.


நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று (23-03-2019) மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்