மொசாம்பிக்கில் கோரதாண்டவம் ஆடிய இடாய் புயல்! 417 பேரை பலியான பரிதாபம்


ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கை இடாய் புயல் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது.
மொசாம்பிக்கின் துறைமுக நகரமான பெய்ராவை, கடந்த வாரம் ‘இடாய்’ புயல் மணிக்கு 177 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கியது. இந்த புயலின் அசுரவேக தாக்குதலால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன.
நாட்டின் சில பகுதிகளில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்து சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

புயலின் கோரத்தாண்டவத்தால் இதுவரை 417 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. புயலைத் தொடர்ந்து பெய்த பெருமழையால் பல பகுதிகளில் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
மொசாம்பிக் நாட்டில் ஏற்கனவே வறுமை நிலவி வந்த நிலையில், இந்த புயல் ஏற்படுத்திய தாக்குதலால் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதேபோல் அருகாமையில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் சுமார் 250 பேர் பலியாகியுள்ளதாக ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்