தளபதிக்கு நான் நன்றியுள்ள நாய்: விஜய்63ல் நடிக்கும் பிக்பாஸ் 2 பிரபலம் பேச்சுவிஜய் 63 படம் தற்போது பரபரப்பான ஷூட்டிங்கில் உள்ளது. படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். மேலு விவேக், யோகி பாபு என பல காமெடியன்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் 2 நடிகர் தாடி பாலாஜி தளபதி 63 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இந்த வாய்ப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தான் வாங்கி கொடுத்தாராம். ஏற்கனவே சச்சின் படத்தின் விஜய்யுடன் நடித்துள்ளார் பாலாஜி. ஏற்கனவே தளபதி63 படத்தில் நடித்து முடித்துவிட்டேன்.. டப்பிங் மட்டும் பேச வேண்டியுள்ளது என பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விஜய் தனக்கு பல உதவிகள் செய்துள்ளார் என்று கூறியுள்ள அவர், "சர்கார் பிரச்சனை சமயத்தில் அவர் எவ்வளவு மன உளைச்சலில் இருந்திருப்பார். அவருக்கு எல்லா சமயத்திலும் அனைவரின் ஆசியும் உள்ளது. தளபதிக்கு நான் நன்றியுள்ள நாய். எப்போது கூப்பிட்டாலும் போவேன். அவர் எனக்கு செய்த உதவிகள் அவ்வளவு" என கூறியுள்ளார் பாலாஜி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்