பாதுகாப்பையும் மீறி தளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! கடும் கோபத்தில் நயன்தாரா செய்த செயல்நடிகை நயன்தாரா தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி63 படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் வடசென்னையில் உள்ள ஒரு இடத்தில் நடந்து வருகிறது.
ஷூட்டிங் நடப்பதை பார்க்க அதிக கூட்டம் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சில ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் முன் அனுமதி பெறாமல் நயன்தாராவை பார்க்க துணை இயக்குனர் ஒருவர் சென்றுள்ளார். உங்களிடம் கதை சொல்ல வேண்டும் என பேச ஆரம்பித்துள்ளார்.
இதற்குமுன் நயன்தாரா நடித்த ஒரு படத்தில் அவர் பணியாற்றியிருந்தாலும், அவரை பார்த்தவுடன் நயன்தாராவிற்கு அதிர்ச்சி. காரணம் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி அவர் உள்ளே வந்தார் என்பது தான்.
உடனே ஜிம் பாயிஸுக்கு சொல்லி அந்த துணை இயக்குனரை வெளியே துரத்தி அனுப்பிவிட்டாராம். நன்கு தெரிந்த ஒருவரையே இப்படியா நடத்துவது என அந்த இயக்குனர் ஆதங்கத்துடன் பேசி வருகிறாராம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்