தளபதி-63 சாட்டிலைட் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்றதா! ரிலிஸிற்கு முன்பே மிகப்பெரும் சாதனைதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்து வருகின்றது.
இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் தொலைக்காட்சி வாங்கியதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.
தற்போது இவை எத்தனை கோடிக்கு சென்றுள்ளது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது, தளபதி-63 தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சாட்டிலைட் ரைட்ஸும் விற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு சேர்த்து மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் இதையெல்லாம் வைத்து பார்க்கையில் தளபதி-63 சுமார் ரூ 50 கோடி வரை விற்றுள்ளதாம். மேலும், ஹிந்தி ரைட்ஸ் எல்லாம் சேர்த்தால் எப்படியும் ரூ 65 கோடி வரும் என கூறப்படுகின்றது, படம் ரிலிஸிற்கு முன்பே ரூ 65 கோடி வரை பெற்றுள்ளது தளபதி-63.

கருத்துரையிடுக

0 கருத்துகள்