இந்த 6 ராசிக்காரர்களின் நெருக்கமான உறவை என்ன செய்தாலும் அசைக்கவே முடியாதாம்! எந்தெந்த ராசிக்காரர் தெரியுமா?


உதவி என்பது ரொம்பவும் முக்கியமான விஷயம். உதவி கேட்பதும் சரி, உதவி செய்வதும் சரி இரண்டு பேருக்கு இடையே ஒரு நல்ல உறவை ஏற்படுத்தும். ஆனால் சில பேர்கள் எந்த காரியமாக இருந்தாலும் தாங்கள் ஒத்தையாக இருந்து சமாளிப்பார்கள். இவர்களுக்கு உதவி கேட்பதே பிடிக்காது.
வெற்றிக் கனியை தாங்கள் மட்டுமே ருசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இது அவர்களுடைய தன்னிறைவை குறிக்கிறது. அப்படி ஒத்தையாக மல்லுக்கட்டும் ராசிக்காரர்கள் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரூப் ஆக இருந்து செயல்படவும் பிடிக்கும் அதே நேரத்தில் தன்னந்தனியாக இருந்து செயல்படவும் பிடிக்கும். ஆனால் பெரும்பாலும் இவர்கள் தன்னந்தனியாக நின்று செயல்படவே விரும்புவார்கள். இவர்களுக்கு உதவி கேட்பதும் நன்றி சொல்வதும் அந்த அளவுக்கு பிடிக்காது. இவர்கள் தங்கள் சுய மதிப்பீட்டை எப்பொழுதும் உயர்வாகவே வைத்து இருப்பார்கள். எனவே ஒண்டிக் கட்டையாக இருந்தே வெற்றி பெற துடிப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள்.
மேஷம்
இவர்கள் எந்த ஒரு காரியத்தையும் தங்களால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். அதனாலேயே தங்களால் முடிந்த வேலைகளை மட்டுமே இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படியே உதவி தேவைப்பட்டாலும் கடைசில தான் மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். அதிலும் அவசர அவசரமாக வேலையை செய்வதால் மற்றவர் உதவியை நாடினால் நேரம் வேஸ்ட் ஆகும் என்று நினைத்து கேட்க மாட்டார்கள்.
கன்னி
வெற்றி ஒன்றே போதும் இவர்களை வழிநடத்த. இவர்களும் ஒத்த ஆளாக நின்று எதையும் முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். தங்கள் கைகளில் நிறைய வேலைகளை வைத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சுய ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள். இதனால் மற்றவர்களிடம் அதிக நேரம் செலவழிக்க விரும்பமாட்டார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மற்றவர்களிடம் உதவி கேட்க பிடிக்கும். ஆனால் அதைவிட தன் கை உதவியையே விரும்புபவர்கள். எனவே தங்கள் தேவைகளுக்கு மற்றவர்களிடம் சென்று கெஞ்சிக் கொண்டு இருக்கமாட்டார்கள். சுய தொழில் சுய ஆதிக்கம் என்று செயல்படுபவர்கள். எனவே தங்கள் வழியில் குறுக்கே வரும் மற்றவர்களின் எண்ணங்கள் ஏன் அவர்களையே காலி செய்து விடுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களின் மேல் எப்பொழுதும் நம்பிக்கை இல்லாமல் இருப்பார்களாம். இவர்களுக்கு மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட மாட்டார்களாம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று போய்க்கிட்டே இருப்பார்களாம். எனவே இந்த தலைப்பு இவர்களுக்கு நல்லாவே பொருந்தும். வேலை மட்டும் இல்லைங்கோ சாப்பிடுவது, டீவி பார்ப்பதில் கூட தனிமையை நாடுவார்களாம்.
மிதுனம்
இவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் வேலையை பாராட்டும் மனப்போக்கு இவர்களுக்கு கிடையாது. எனவே மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாத வேலையை செய்யவே இவர்கள் விரும்புவார்கள். நிறைய நம்பிக்கையுடன் ஒரே வழியை தேர்ந்தெடுத்து தனியாக காரியத்தை முடிக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவே இவர்களுக்கு எல்லாருடன் சேர்ந்து புதுப்புது வழிகளில் வேலை செய்வது பிடிக்காது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்