அவுஸ்திரேலியாவிடம் படுமோசமான தோல்வி! விராட் கோஹ்லி சொல்வது என்ன?
மொஹாலியில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் 358 ஓட்டங்கள் எடுத்தும் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது இந்தியா.
இதுகுறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், இரண்டு ஆட்டங்களிலும் பனிப்பொழிவின் தவறான பக்கத்தில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.
கடந்த போட்டியில் பனிப்பொழிவு இருக்கும் என்றனர், ஆனால் அது தவறாகிப் போனது.
அவர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான், தேர்ந்தெடுத்து விளையாடினார்கள்.
5வது பந்துவீச்சாளர் வேண்டாம் என்று நினைத்தோம், விஜய் சங்கர், சாஹல் பனிப்பொழிவில் பந்துவீச வேண்டாம் என்பதற்காக முன்னதாகவே அவர்கள் ஓவர்களை முடித்துவிட நினைத்தோம்.
எனினும் இதையெல்லாம் தோல்விக்கு காரணமாக கூறமுடியாது, கடைசி சில ஓவர்களில் 5 வாய்ப்புகளை கோட்டை விட்டோம், பீல்டிங்கிலும் சொதப்பியதால் தோல்வியை தழுவினோம்.
கடைசி போட்டி நிச்சயம் சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்