சீனாவில் பரபரப்பு ?


சீனாவில் மக்கள் கூடியிருந்த பகுதியொன்றுக்குள் காரைச் செலுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் சீனாவின் மத்திய பகுதியான ஹுபே மாகாணத்தின் ஜியோயாங் நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் காரைச் செலுத்திய மக்களை கொலைசெய்யத காரின் சாரதியை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதேவேளை, கடந்த செபடம்பர் மாதம் சீனாவின் மத்திய யுனான் மாகணத்தில் இவ்வாறனதொரு சம்பவம் இடம்பெற்ற நிலையில், 11 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விபத்தையேற்படுத்திய காரை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சீன பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்