படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான் விஜய்… தன் கார் டிரைவர் வீட்டு திருமணத்தில் அவர் செய்ததை பாருங்க..


இளைய தளபதி விஜய் நடித்த ஜோய் ஆலுக்காஸ் விளம்பரம் நினைவில் இருக்கிறதா?
பட்டி,தொட்டியெங்கும் ஹிட் அடித்த விளம்பரம் அது. இளைய தளபதி விஜய் ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடையில் கம்மல் வாங்குவார். அப்போது அவரது கார் டிரைவரிடம் அதைக் காட்டுவார். ’அம்மாவுக்கா சார்? நல்லா இருக்கு’ என்பார் டிரைவர். விஜய் காரில் ஏறியதும் டிரைவர் வீட்டுக்கு போக ரூட் சொல்லுவார். தன் கார் டிரைவர் மகள் ஐ.ஏ.எஸ் பாஸ் ஆனதற்கு அதை கிப்டாக கொடுத்து அசத்துவார்.

விளம்பரம் தான் என்றாலும், அதை பார்த்ததுமே தளபதி ரசிகர்கள் பூரித்து போய் இருந்தார்கள். இப்போது அதேபோல் ஒரு சம்பவம் நிஜத்திலும் நடந்துள்ளது. அதே கார் டிரைவருக்கு திரைக்கு அப்பால் நிஜத்திலும் மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார் தளபதி விஜய்.
அது குறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். இளைய தளபதி விஜய் வீட்டில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக முருகன் கார் டிரைவராக இருந்து வருகிறார். முருகனின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. முருகன் இதுதொடர்பான அழைப்பிதழ் கொடுக்கச் சென்றிந்த போது விஜய், அட்லியுடன் வெளிநாட்டில் சூட்டிங்கில் இருந்தார். தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பிதழ் கிடைத்த விசயத்தை விஜயிடம் சொல்ல, திருமணத்தின் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டது விஜய் குடும்பம்.

ஆனால் திருமணத்தன்று முருகனே எதிர்பார்க்காத ஒரு ஆச்சர்ய சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் இளைய தளபதி என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் வருகை. வெளிநாட்டு படப்பிடிப்பை ஒத்தி வைத்த விஜய் திடீர் என திருமண வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். மேலும் அவர் வந்ததோடு மட்டுமல்லாமல் இயக்குநர் அட்லி, நடிகை கீர்த்தி சுரேஷ் என மொத்த யூனிட்டையும் கூட்டி வந்திருந்தார் விஜய்.

வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த விஜயின் திடீர் வருகை டிரைவர் முருகனின் மொத்த குடும்பத்தையும் வியப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து மணமக்களுக்கு தங்கச்சங்கிலி பரிசளித்த விஜய், ‘’பெண்ணிடம், உங்க அப்பா 20 வருசமா என் கூட இருக்கார். அவர் என் வீட்டில் ஒருத்தரு போல…நீ என் தங்கச்சி மாதிரி. நல்லா இருக்கணும்மான்னு..”வாழ்த்தி உள்ளார். பக்கத்தில் இருந்த முருகனோ கையெடுத்து கும்பிட்டு மணமேடையிலேயே கண்கலங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்