உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்உடன்படிக்கை எதுவுமில்லாமல் அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
உடன்பாடற்ற சூழ்நிலைக்கான தயார்ப்படுத்தல்களை நாங்கள் செய்து முடித்துவிட்டோம். ஆனாலும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் விளைவுகள் மக்களையும் வணிகங்களையும் கணிசமான அளவில் பாதிக்கும்.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் நிகழ்ந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய ஏற்றுமதிகளின் மீது சோதனைகளும் வரிகளும் விதிக்கப்படும். அது எல்லைகளில் குறிப்பிடத்தக்க தாமதங்களில் உண்டாக்கக்கூடும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் திட்டங்கள் தற்காலிகமானவை. இவை சிறிய ஒப்பந்தங்களோ அல்லது பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெறப்பட்டவையோ அல்ல.
ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒருதலைப்பட்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டையே பராமரித்து வருகிறது. இனியும் உடன்பாடற்ற சூழ்நிலையிலும் நாங்கள் அதே நிலைப்பட்டைத் தான் கடைப்பிடிப்போம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்