உலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா? கொண்டாடுகின்றது கூகுள்


தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்படுவது இணையம் ஆகும்.
இதன் சேவைகளுள் ஒன்றான உலகளாவிய இணையம் (WWW - World Wide Web) அறிகம் செய்யப்பட்டு இவ் வருடம் 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதனைக் கொண்டாடும் முகமாக கூகுள் தனது தேடுபொறியின் டூடுலை வடிவமைத்துள்ளது.
இதற்காக தனது நாமத்தினை பருமன் கூடிய பிக்சல்களைக் கொண்ட எழுத்துக்களால் உருவாக்கியுள்ளதுடன், உலகப் படம் ஒன்று சுற்றுவது போன்றும் அமைத்துள்ளது.
உலகளாவிய இணையம் தொடர்பில் 33 வருடங்களுக்கு முன்னர் Tip Berners Lee என்பவர் தனது நிறுவனத் தலைவருக்கு முன்மொழிந்திருந்தார்.
பின்னர் முன்மொழிவு ஆராயப்பட்டு 1989 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இச்சேவையினை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகளவில் சுமார் 2 பில்லியனிற்கும் அதிகமாக இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்