நியூசிலாந்தில் கொடூர துப்பாக்கி பிரயோகம்! 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிலப்பு


நியூசிலாந்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Christchurch பகுதியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாக 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த தாக்குதல் காரணமாக இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக, அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதித் தூதுவர் செனரத் திசநாயக்க தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலுக்குள் புகுந்த நபர் சரமாரியாக சுட்டதில் காலை நேர தொழுமைக்காக வந்திருந்த பெருமளவான பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் உலகை உலுக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்