ஏ. ஆர். ரஹ்மானுக்கு ட்வீட்டரில் கோரிக்கை வைத்த மோடி என்ன சொன்னார் ஏ. ஆர். ரஹ்மான்?
பிரதமர் மோடி மிகுந்த எதிர்பார்ப்புடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை மெஷன் செய்து ட்வீட் போட அவரோ பொசுக்கென்று பதில் அளித்துவிட்டார். லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் பிரபலங்கள் பலரின் பெயர்களை மென்ஷன் செய்து வாக்களிக்குமாறு மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதே போன்று நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானையும் மென்ஷன் செய்துள்ளார்.

மோடி மோடியின் ட்வீட்டை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் குஷியாகி பதிலுக்கு அவரை மென்ஷன் செய்து மக்களே நம் ஜனநாயக கடமையை செய்ய மறக்கக் கூடாது, அப்படி இப்படி என்று அறிவுரை வழங்கியுள்ளனர். இதில் ரஹ்மான் மட்டுமே மோடிக்கு வித்தியாசமாக பதில் அளித்துள்ளார்.ஏ.ஆர். ரஹ்மான் ஏதாவது பெரிதாக சொல்வார்கள், அதை பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்து மோடி ட்வீட் செய்ய ஏ.ஆர். ரஹ்மானோ கண்டிப்பாக, நன்றி என்று பொசுக்கென்று பதில் அளித்துவிட்டார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்