இறுதி யுத்தத்தில் வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்கள் தொடர்பில் ஆதாரம்! பொன்சேகா அதிரடி அறிவிப்பு!ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சில இராணுவ அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான சாட்சியங்கள் தன்னிடம் இருக்கின்றன என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
இறுதி யுத்தத்தின் கடைசி நேரத்தில் சரணடைந்தவர்களின் வெள்ளைக்கொடிச் சம்பவத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் என்னிடம் இருக்கின்றன. தேவையான நேரத்தில் அவற்றை முன்வைக்கத் தயாராக உள்ளேன் என மிகவும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
மேலும் இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட சட்டவிரோதமான நடவடிக்கைகள் சம்பந்தமான காணொளிகளும் என்னிடம் இருக்கின்றன. அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்