இந்திய நாடாளுமன்ற தேர்தல் திகதி அறிவிப்பு: முழு விவரங்கள்

2019 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 ஆம் திகதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.
முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்குகிறது. மே 23-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11
2வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18
3வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 23
4வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 29
5வது கட்ட தேர்தல் - மே 6
6வது கட்ட தேர்தல் - மே 12
7வது கட்ட தேர்தல் - மே 19
தமிழகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா , தெலுங்கானா, கேரளா , தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 11 , ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய ஏழு தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே வெளியிடப்படும்.
மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தனியாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கிகள் வைக்க கூடாது. தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் அனைத்து மாநிலங்களிலும் அதிகளவில் குவிக்கப்படவுள்ளனர்.
பூத் ஸ்லிப்கள் மூலம் வாக்களிக்க முடியாது. அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள். அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குகளை உறுதி செய்யும் கருவி பொறுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு PWD செயலி மூலம் தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வழிவகை செய்துள்ளோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்