நியூசிலாந்தை கதிகலங்க வைத்த முக்கிய தீவிரவாதி குறித்து துருக்கி வெளியிட்ட பகீர் தகவல்

நியூசிலாந்தில் துப்பாக்கி சூட்டின் முக்கிய குற்றவாளியான Brenton Tarrant மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக முறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் துருக்கி நாட்டில் நீண்ட் நாட்கள் தங்கியிருந்ததாக அந்நாட்டு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
நான் ஒரு சாதாரண வெள்ளை மனிதன் என இந்நாட்டுக்கு கூறிக்கொண்டு சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் Brenton, தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு 2011 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான், துருக்கி, வடகொரியா மற்றும் பல்கேரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து மேலே கூறப்பட்டுள்ள நாடுகள், Brenton தங்கள் நாட்டுக்கு வருகை புரிந்த விவரங்கள் குறித்த விசாரணை முடுக்கிவிட்டுள்ளன.
இதில், துருக்கி நாட்டில் நீண்ட நாட்கள் வசித்ததாகவும், 2016 ஆம் ஆண்டு அவர் துருக்கி விமான நிலையத்தில் நடந்துசென்ற காட்சி கிடைத்துள்ளதாகவும் அந்நாட்டு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
Ataturk சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் நடந்துசெல்லும் காட்சியை துருக்கி அரசு வெளியிட்டுள்ளது. மேலும், Brenton பயன்படுத்திய துப்பாக்கியில் ஆங்கிலம் மற்றும் சிரிலிக்கில் பல இராணுவ எண்ணிக்கையிலான பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
அவர்கள், 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் ஓட்டோமன்களை எதிர்த்துப் போராடிய ஐரோப்பியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருக்கி விமான நிலையத்தில் நடந்து வரும் சி.சி.டி.வி காட்சிகளையும், மற்றும் அவர் நாட்டிற்கு மற்றொரு முறை வந்த பயணம் குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நபரின் செயல்பாடுகள் மற்றும் துருக்கி நாட்டில் அவரது தொடர்பாடுகள் குறித்து விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்