அந்த தொடரின் தோல்வியின் போது வருத்தமாக இருந்தது..மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய டோனி


இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனி, தன்னுடைய வாழ்வில் தான் சந்தித்த அழுத்தம் பற்றி கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடர்பான ஐபிஎல் தொடர் இந்தாண்டு வரும் 23-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் 2019 தொடர்பாக ரோர் ஆப் லையன் என்ற டாக்குமெண்டரியை ஹாட்ஸ் ஸ்டார் வெளியிட்டுள்ளது.
அதில், ஐபிஎல் தொடரில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து டோனி மிகவும் உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார்.
என்னுடைய வாழ்க்கையில் 2013-ஆம் ஆண்டு மிகவும் கடினமானது. அதுவரை அப்படி ஒரு மன அழுத்தத்தை நான் அனுபவித்ததில்லை.
2007-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் நம்முடைய அணி லீக் போட்டியிலே வெளியேறியது.
எனக்கு வருத்தமாக இருந்தது. அப்போது நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்றுதான் எல்லோரும் சொன்னார்கள்.
ஆனால், அதுவே 2013-ஆம் ஆண்டு சர்ச்சை மிகவும் வித்தியாசமானது. அப்போது, மக்கள் கிரிக்கெட் சூதாட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதுதான் நாட்டில் பெரிய பேச்சாக இருந்தது.
முதலில் குருநாத்தின் பெயர் அடிபட்டது. அவர் எங்கள் அணியைச் சேர்ந்தவர். அவர் அணியின் உரிமையாளரா?, தலைவரா?, ஆலோசகரா? உண்மையில் அவர் யார்? ஆனால், அவரை சீனிவாசனின் மருமகனாகத்தான் எங்களுக்கு தெரியும்.
நீங்கள் எப்படி இப்படி செய்தீர்கள் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை. எனக்கும் இது குறித்து மற்றவர்களிடம் பேச பிடிக்கவில்லை.


என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும் எதையும் நான் விரும்பவில்லை, என்னைப் பொருத்தமட்டில் கிரிக்கெட்தான் மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்