சென்னையில் மட்டுமல்ல.. இனி திருச்சி, சேலம், கோவை, மதுரையிலும் மெட்ரோ..தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களான திருச்சி, சேலம், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. திமுக கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

கிராமபுறங்கள், வளரும் நகரங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் அதிக கவனம் பெற்றது. பல்வேறு நலத்திட்டங்களை கொண்டதாக திமுக தேர்தல் அறிக்கை உள்ளது.

அதன்படி வளர்ந்த மாவட்டங்களான திருச்சி, சேலம், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இதற்கான பணிகளை தொடங்க உள்ளதாக திமுக கூறியுள்ளது. சென்னையில் மெட்ரோ பணிகள் முடிந்து, தற்போது புதிய மார்க்கமாக மெட்ரோ போடப்பட்டு வருகிறது. சென்னையில் இப்போதுதான் மெட்ரோவை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்னும் பல மாவட்டங்களுக்கு மெட்ரோவை அறிமுகப்படுத்த போவதாக திமுக தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்