பேஸ்புக், யூடியூப் நிறுவனங்கள் மீது வழக்கு தொடுப்பு: அதிர வைக்கும் காரணம்எந்தவொரு தகவல்களையும் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவச்செய்யக்கூடிய ஆற்றல் யூடியூப் மற்றும் பேஸ்புக் வலைத்தளங்களுக்கு உண்டு.
இதுவே குறித்த நிறுவனங்களுக்கு சில சமயங்களில் பேரிடியாக அமைவதும் உண்டு.
இதேபோன்றே அண்மையில் நியூசிலாந்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் இரு நிறுவனங்களுக்கும் தலைவலியாக மாறியுள்ளது.
குறித்த பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ள அதேவேளை அவ் வீடியோ நகல் செய்யப்பட்டு தொடர்ந்தும் பகிரப்பட்டு வருகின்றது.
இதனால் பிரான்ஸ் நாட்டிலுள்ள முஸ்லிம் குழு ஒன்று பேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
எவ்வாறெனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோக்களை இவ்விரு நிறுவனங்களும் தமது தளங்களில் இருந்து நீக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்