சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கிய இலங்கை: எச்சரிக்கும் அமெரிக்க அதிகாரி

சீனா படிப்படியாக கொள்ளை ரீதியான பொருளாதார முறையை நோக்கி செல்வதாக அமெரிக்க கூட்டு சபையின் தலைவர் ஜெனரல் ஜோசப் டன்டர்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் இராணுவப்படைகள் தொடர்பான குழுவின் முன்னிலையில் அவர் இதனை கூறியுள்ளார். சீனா பாகிஸ்தானுக்கு 10 பில்லியன் டொலர் கடன் நிதியை வழங்கி, முக்கியத்துவம் வாய்ந்த ஹிக்வாடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வருவதாகவும் சீனா பல உள்நோக்கங்களுடன் இதனை மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
“ சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நேரடி கடல் வழியை அமைக்கும் நோக்கிலேயே சீனா ஹிக்வாடார் துறைமுகத்தை சீனா அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளது.
அதுதான் சீனாவின் தந்திரம். கடந்த காலங்களிலும் சீனா இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. உதாணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க சீனா, இலங்கைக்கு பெருந்தொகை பணத்தை வழங்கியது.

அந்த கடனை அடிப்படையாக கொண்டு சீனா அந்த துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து தன்வசப்படுத்தியுள்ளது. இது சீனாவின் கொள்ளை ரீதியான கடன் வழங்கும் கொள்கையின் ஒரு உதாரணம் மட்டுமே” எனவும் ஜோசப் டன்டர்ப் தெரிவித்துள்ளது.
அதேவேளை மாலைதீவு தனது மொத்த தேசிய வருமானத்தில் 30 வீதத்தை சீனாவிடம் பெற்ற கடனுக்காக செலுத்தி வருகிறது. மாலைதீவு தனது அபிவிருத்திக்காக சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றிருந்ததே இதற்கு காரணம்.
சீனா தனது அயல் நாடுகளில் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வது என்ற போர்வையில், கடனை வழங்கி, அந்நாடுகளை இராணுவ ரீதியான வேலைகளுக்காக அடிப்பணிய வைக்கும் நடைமுறையை கையாண்டு வருகிறது.
சீனா இந்த நடவடிக்கைகள் மூலம் இந்திய - பசுபிக் கடல் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எதிர்பார்த்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சீனா தனது விமான மற்றும் கடற்படை பலத்தை 12 மடங்காக அதிகரித்துள்ளதுடன் படைகளுக்கு ஆட்சேர்ப்புகளையும் அதிகரித்துள்ளது.
இது எதிர்காலத்தில் அமெரிக்க படையினருக்கு மட்டுமல்ல பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பலத்த சவாலாக அமையும் எனவும் ஜோசப் டன்டர்ப் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்