வடகொரியாவின் முதல் குறி அமெரிக்க இல்லையாம்; இந்த நாடு தானாம்!


சர்வாதிகாரி என்றும், கையாள் ஆகாதவன் என்றும் விமர்சனங்களுக்குள் சிக்கி திளைக்கும் வடகொரியாவின் கிம் ஜொங் உன்னின் கைகளில் "அப்படி என்னதான் இருக்கிறது? அவரின் மீது ஏன் அண்டை நாடுகளும், உலக நாடுகளும் ஒரு கண் வைத்து உள்ளது?" எனும் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க வேண்டும் என்றால் - ஆயுதபலம்! 

ஆம், உலக நாடுகளின் எச்சரிக்கை மற்றும் நெருக்கடி போதாக்குறைக்கு ஐ.நா வின் ஆணைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என பல பாரங்களை சுமக்கும் வட கொரியா, பத்து நிமிடங்களில் நம்மை எல்லாம் காலி செய்யும் திறனை கொண்டு உள்ளது என்பதே கசப்பான உண்மை. ஆம் வடகொரியாவிற்கு எதிரான ஒரு பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடங்கலாமா என்பதைத் தீர்மானிக்க அமெரிக்க ஜனாதிபதியான ட்ராம்ப்பிற்கு "சுமார் 10 நிமிடங்கள்" மட்டுமே நேரம் கிடைக்கலாம். அந்த அளவிலான வேகத்தின் கீழ், அமெரிக்க நிலப்பகுதியை அடையும் திறன்களை கொண்ட ஏவுகணைகளை வடகொரியா கொண்டுள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.


அணு ஆயுத தாக்குதல் ஒருவேளை வடகொரியாவில் இருந்து ஒரு அணு ஆயுத தாக்குதல் தொடங்கப்பட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி விவாதத்தில், யூ சி எஸ் உலகளாவிய பாதுகாப்பு திட்டத்தின் ஒரு விஞ்ஞானி ஆன டேவிட் ரைட் மற்றும் ஜெர்மனியின் எஸ்டி அனலிட்டிக்ஸ் ராக்கெட் ஆய்வாளர் மார்கஸ் ஸ்கில்லர் ஆகிய இருவரும் கலந்து கொண்டு, அந்நிகழ்வு எப்படி அமையலாம்? எப்படி இருக்காலம் என்பதை விவரித்தனர்.நீண்ட தூர ஏவுகணை இப்படி ஒரு தாக்குதல் நிகழும் போது அதற்கான "காலக்கெடு மிகவும் குறுகியதாக இருக்கும்" என்று ரைட் விளக்கினார். "நீண்ட தூர ஏவுகணைகளாக இருந்தாலும் கூட, அந்த ஏவுகணைகளை கண்டுபிடிப்பதற்கும், அது என்ன என்பதை கண்டறிவதற்கும் நிறைய நடவடிக்கைகள் மற்றும் நேரங்களை நாம் செலவிட வேண்டியதாக இருக்கும். ஆக, தாக்குதல் உறுதி செய்யப்பட்டு பதில் தாக்குதல் நடத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை ஜனாதிபதி முடிவு செய்ய வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கலாம்" என்றார்.பசிபிக் பெருங்கடல் வட கொரியாவிடம், அமெரிக்காவை அடையக்கூடிய ஒரு ஏவுகணை இல்லை என்று வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், கம்யூனிச நாடுகளில் ஒன்றான வடகொரியா, அந்த பலம் தங்களிடம் உள்ளதாக கூறிய வண்ணம் உள்ளது. வட கொரிய அரசு நடத்தும் கே சி என் ஏ செய்தி சேவையில் வெளியான அறிக்கையின் படி, பசிபிக் பெருங்கடல் முழுவதும் ஒரு பெரிய அளவிலான கனரக அணுவாயுதத்தை அனுப்பும் திறனை வட கொரியா கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆனது ஹெவ்ஸொங் -12 என்கிற ஏவுகணை சோதனைக்குப் பின்னர் வெளியிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.தென் கொரியா ஆனால் தென் கொரியாவின் க்யுங்நாம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான கிம் டோங்-யுப் - உள்ளூர் ஊடகங்களுக்ளில் - கூறிய கருத்தின் படி, வடகொரியாவின் நீண்ட தூர ஏவுகணை ஆனது அலாஸ்கா அல்லது ஹூவாயை சந்திப்பதற்கே அதிர்ஷ்டம் கொண்டிருக்க வேண்டும்". ஒருவேளை அமெரிக்க இலக்குகளை தாக்கும் திறனை அவர்கள் (வட கொரியா) பெற்றிருந்தால், ரைட் மற்றும் ஷில்லரின் கருத்துப்படி, விஷயம் அமெரிக்காவின் கையை மீறி செல்வத்தையும், மற்றும் அது மிகவும் வேகமாக நடப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.ஸ்டைலிஷ் கலெக்ஷன், இலவச டெலிவரி, ரிட்டர்ன்.. பிளிப்கார்ட்டில் 20000+ ஸ்டைலான ஆடைகள்.. சிறந்த டீலுடன் அமேசானில் மட்டும்! ஆன்லைனில் குறைந்த விலையில் சிறந்த கிச்சன், டைனிங் பொருட்கள்! கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை ரைட்டின் கணிப்பின் படி, வடகொரியாவின் இருந்து வெளியேற்றப்படும் ஒரு கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஆனது சான் பிரான்சிஸ்கோவை அடைய, வெறும் அரை மணி நேரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். மறுகையில் உள்ள ஸ்கில்லரின் கணிப்பின் படி, சியாட்டில் அல்லது லாஸ் ஏஞ்சல்ஸை வடகொரியாவின் ஒரு ஏவுகணை சந்திக்க, 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும்.
நியூ யார்க் மற்றும் வாஷிங்டன் சுமார் 6,800 மைல்களுக்கு அப்பால் உள்ள நியூ யார்க் மற்றும் வாஷிங்டன் போன்ற நகரங்களை தாக்க 30 முதல் 40 நிமிடங்களுக்குள் ஆகும் என்று ஸ்கில்லர் மற்றும் ரைட் கூறியுள்ளனர். தொலைதூரத்தில் உள்ள அமெரிக்காவிற்கே இந்த நிலை என்றால், கொரிய தீபகற்பத்தைச் சுற்றியிருக்கும் அமெரிக்க நட்பு நாடுகளின் நிலை இன்னும் மோசம். அவர்கள் தாக்கப்படுவதற்கான நேரம் மிக மிக குறைவாகவே இருக்கும்.தப்பிக்க பூஜ்யம் முதல் 6 நிமிடங்கள் மட்டுமே கிடைக்குமாம் சியோலில் வாழும் மக்களுக்கு வடகொரியாவில் இருந்து வரும் ஒரு ஏவுகணையிடம் இருந்து தப்பிக்க பூஜ்யம் முதல் 6 நிமிடங்கள் மட்டுமே கிடைக்குமாம். அதாவது எந்த நேரத்திலும் வடகொரியாவின் ஒரு ஏவுகணை அந்த நிலப்பகுதியை தாக்கலாம் என்று அர்த்தம். ஜப்பானில் உள்ளவர்கள் சற்று அதிர்ஷ்டசாலிகள் ஏனெனில் ஒரு பதில் யுத்தத்தை தயாரிக்க அவர்களுக்கு இன்னும் சிறிது கூடுதல் நேரம் கிடைக்கும். அதாவது ஸ்கில்லர் மற்றும் ரைட்டின் கணிப்பின் படி, வடகொரியாவின் ஒரு ஏவுகணை டோக்கியோவை அடைவதற்கு 10 முதல் 11 நிமிடங்கள் ஆகும்.ஸ்கில்லர் மற்றும் ரைட் ஜப்பான் அல்லது தென் கொரியா மீதான தாக்குதல் என்று வரும் பட்சத்தில் வடகொரியாவிற்கு, இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை கட்டவிழ்த்து விடுவதற்கான ஒரு விருப்பமும் உள்ளது. இவ்வகையான தாக்குதல்களை நிகழ்த்தும் வல்லமை கொண்ட மீடியம்-ரேஞ்ச் ஸ்குட் ஏஆர் ஏவுகணைகள் ஆனது வடகொரியாவால் ஏற்கனவே சோதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு அமைப்புகளை தென் கொரியாவும் ஜப்பானும் கொண்டிருந்தாலும் கூட, வடகொரியா பல ஏவுகணைகளை ஒரே நேரத்தில் செலுத்தும் பட்சத்தில் அவர்கள் தோல்வி அடையலாம் என்று ஸ்கில்லர் மற்றும் ரைட் எச்சரித்து உள்ளனர்.முதல் இலக்கு ஸ்கில்லர் மற்றும் ரைட்டின் கருத்துப்படி, வடகொரியா ஒரு போரை தொடங்கும் பட்சத்தில் அதன் முதல் இலக்கு அமெரிக்காவாக இருக்காது, அது தென் கொரிய நகரமான புசனாக இருக்கலாம். ஏனெனில் அந்த நகரம் தான் அமெரிக்க கடற்படைக்கான ஒரு துறைமுகமாக பயன்படுத்தப்படுகிறது.அமெரிக்காவின் பதிலடி சரி அமெரிக்காவின் மீது வடகொரியாவின் தாக்குதல் உறுதி செய்யப்பட்டால், அமெரிக்காவின் பதிலடி எப்படி இருக்கும் எனும் கேள்விக்கும், ஸ்கில்லர் மற்றும் ரைட் பதில் அளித்தனர். ஒருவேளை டிரம்ப் பின்வாங்க முடிவு செய்யவில்லை என்றால், அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் காற்றை அடிப்படையாகக் கொண்ட ஐ சி பி எம் ஏவுகணைகள் செலுத்தப்படும். மற்றும் 15 நிமிடங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களை அடிப்படையாகக் கொண்ட ஏவுகணைகள், வடகொரியாவை நோக்கி சீறிப்பாயும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்