டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீஹிட்.. ஐசிசி-க்கு புதிய விதிமுறைகள் பரிந்துரை


கிரிக்கெட் ஆட்டங்களுக்கு விதிமுறைகளை பரிந்துரை செய்யும் எம்.சி.சி வேர்ல்ட் கிரிக்கெட் கமிட்டி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான புதிய விதிமுறைகளை ஐ.சி.சி-க்கு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்ற எம்.சி.சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட புதிய பரிந்துரைகள் ஐ.சி.சி-க்கு முன் வைக்கப்பட்டன.
  • ஒருநாள், டி20 போல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் ‘No Ball'-க்கு Free Hit வழங்கலாம்.
‘No Ball'-க்கு Free Hit வழங்கினால் அது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தும். ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘No Ball'-யை குறைக்க இது வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, Free Hit இருப்பதால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ‘No Ball'-யை தான் இங்கிலாந்து அணி வீசியுள்ளது.
  • டெஸ்ட் ஆட்டங்களில் ஓவர்களை விரைவில் முடிக்க ஸ்கோர்போர்டில் டைமர் கிளாக் பொருத்தப்படும். ஒரு ஓவர் முடிந்தால் கவுண்ட் டவுன் ஆரம்பிக்கப்படும். அது ஜீரோவில் முடியும்போது ஆட்டத்தைத் தொடங்க துடுப்பாட்ட வீரரும், பந்துவீச்சாளரும் தயாராக இருக்க வேண்டும்.
ஒரு துடுப்பாட்ட வீரர் அவுட் ஆனாலோ, புதிய பந்துவீச்சாளர் பந்துவீச வந்தாலோ ஆட்டம் முறையே 60 நொடிகள், 80 நொடிகளில் தொடங்கப்பட வேண்டும். கவுண்ட் டவுன் முடியும்போது ஆட்டம் தொடங்காவிட்டால் எச்சரிக்கையும், அபராதமும் விதிக்கப்படும். அத்துடன் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்படும்.
இதன்மூலம் டெஸ்டில் ஓவர்களை முடிக்க அதிக நேரங்கள் எடுத்துக்கொள்வதை சரிசெய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • LBW DRS-யின் போது பந்து பேட்டில் பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க நீண்ட நேரமாகிறது. ஆனால், அதன் பிறகு பந்து ஸ்டம்பில் படாமல் செல்வதைப் பார்க்க முடிகிறது. இதனால் எந்த முடிவு தெளிவாகக் கிடைக்கிறதோ, அதன் மூலம் விரைவாக முடிவெடிக்க வேண்டும்.
  • தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எஸ்.ஜி, கூக்கபுர்ரா, டியூக்ஸ் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்படுவதால் எல்லா டெஸ்டுகளுக்கும் ஒரே வகை பந்துகளைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது டியூக்ஸ் பந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. முன்னதாக, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட எஸ்.ஜி பந்துகள் குறித்து விராட் கோஹ்லி குறை கூறினார்.
இந்த பரிந்துரைகள் குறித்து ஐ.சி.சி விரைவில் முடிவெடுத்து நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்