ஜெனீவாவில் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள்! அடுத்த கட்டம் தொடர்பில் மந்திராலாசோசனை!


சிறிலங்கா தொடர்பிலான தீர்மானம் இன்று வியாழக்கிழமை சபைக்கு வரவுள்ள நிiலியில், ஜெனீவாவில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மந்திராலோசனையில் ஈடுபட்டு வருவதாக எமது ஜெனீவா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாலாவது வாரத்தினை கூட்டத் தொடர் எட்டியிருக்கும் நிலையில், இதுவரை 120க்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடரில் பங்கெடுத்துள்ளதாக உள்ளக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை, தமிழ்நாடு, புலம்பெயர் நாடுகளில் இருந்து இவர்கள் பங்கெடுத்துள்ளனர்.
சிறிலங்கா தொடர்பில் வரவிருக்கின்ற தீர்மானம், நீதிக்காக போராடி வரும் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கு எந்தவகையில் பயன்படும், அல்லது எத்தகைய சாதக பாதகத்தை ஏற்படுத்தும் போன்ற விடயங்களில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ஆலோசானை நடாத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்