புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு !


பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கேள்விகளால் விருந்தினர்களை அதிகம் திணறடிப்பதில் வல்லவர், தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒருவரின் பெயரை மக்கள் நினைவில் வைக்கும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்திருக்கின்றன.
இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் இருந்து கருத்து வேறுபாட்டின் காரணமாக பாண்டே தலைமை செய்தியாசிரியர் என்ற பொறுப்பில் இருந்து விளக்கினார். அதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை எடுத்து சொல்லிவந்தார் பாண்டே.
ராகுலின் வருகை முதல் அதிமுக, திமுகவிற்கு ஒதுக்கப்படும் சீட் விவரங்களை சரியாக எடுத்து முதலாக சொன்னவர் பாண்டே.

தற்போது புதிதாக சேனல் ஒன்றினை பாண்டே தொடங்கி இருக்கிறார் இந்த முறை வாசகர்களை எப்போதும் தொடர்பில் இருக்கும் விதமாக சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யும் விதமாக தனது சாணக்கியா எனும் புது செய்தி சேனலை தொடங்கி இருக்கிறார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் செயல்படும் இந்த சேனலானது விரைவில் சாட்டிலைட் சேனலாக உருமாற வேலைகள் அனைத்தும் நடைபெறுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ பாண்டேவின் ரசிகர்களுக்கு இந்த செய்தி சந்தோசத்தை கொடுத்திருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்