தமிழ்ராக்கர்ஸ் எப்படி முளைத்தார்கள்?ஒரு சுவரஸ்யமான கதை


சர்கார், பாகுபலி, மெர்சல், வடசென்னை உள்ளிட்ட பல படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். கல்லூரி மாணவர்கள்முதல் அலுவலகம் செல்வோர் வரை இதன் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது. 

1957-ம் ஆண்டு இயற்றப்பட்ட காபிரைட் சட்டப்படி, செக்‌ஷன் 63, 63-ஏ, 65, 65-ஏ ஆகிய சட்டப்பிரிவுகளின்படி இணையதளங்களின் படங்களை வெளியிடுவது குற்றம். ஆனால் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களை பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. Tamilrockers .com, tamilroc.co, tamilroc.cl, tamilrockers .Net, tamilrockers-s .co, tamilrockers .ph, tamilrockers .mu,tamilrockers .by,tamilrockers .cl,tamilrockers .li, tamilrockers .tv, tamilrockers .pm, tamilrockers .ax, tamilrockers.gs, tamilrockers .vc, tamilrockers .ro, tamilrockers.hn என பல எக்ஸ்டென்ஷன்களில் இத்தளம் இயங்கி வருகிறது. ஒரு தளத்தை பிளாக் செய்தாலும் மற்ற தளங்களில் படங்கள் பதிவேற்றப்படுகிறது. இந்தியாவில் ஒரு மணிநேரத்தில் 1100 படங்கள் டொரெண்ட் தளத்தில் பதிவேற்றப்படுகிறது. தமிழ்ராக்கர்ஸ் ஆண்டுக்கு 210 கோடி ரூபாய் லாபமடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

DVDrip, HD rip, Camrip, Webrip, BluRay HD rip போன்ற வீடியோ ஃபார்மெட்களில் படங்கள் வெளியாகின்றன. 2007ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் சிவாஜி படத்தை முதன்முதலில் தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டது. அதன் பின்னர் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக இதன் புகழ் பரவியது. தற்போது தமிழ்ராக்கர்ஸுக்குப் போட்டியாக பல சட்டவிரோத வலைதளங்கள் வந்துவிட்டன. filmyhit .com, filmywap .com, xfilmywap .com, dvdrockers .com, tamilplay .com, jalshamoviez .net.in, jiorockerds .in, khatrimaza .link, madrasrockers .com, pagalworld .com, moviesda .com, teluguwap .com உள்ளிட்ட பல பைரஸி தளங்கள் இணையவாசிகள் மத்தியில் பிரபலம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்