அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஆற்றுப் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.
அந்நாட்டின் நெப்ரஸ்கா நகருக்கு அருகில் உள்ள கோனஸ் என்ற இடத்தில் நியோபிராரா ஆற்றுக்கு குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. திடீரென பெய்த கனமழையால் நியோ பிராரா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
வெள்ளத்தின் சீற்றம் காரணமாக பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றதால் அங்கு போக்குவரத்து தடை பட்டுள்ளது. வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு பரபரப்பாய் பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்