ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையை கடுமையாக விளாசிய கஜேந்திரகுமார்!


போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை கைவிடப்போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் இன்றைய தினம் ஜெனீவா அமர்வுகளில் வைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான தினமான பெப்ரவரி 25 ஆம் திகதி கிளிநொச்சியில் ஒன்று திரண்டிருந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு போர் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையொன்றை வலியுறுத்தியிருந்தனர்.
எனினும் இந்த கோரிக்கையை ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கருத்தில்கொள்ளாது சிறிலங்கா தொடர்பில் புதிய தீர்மானமொன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ள நிலையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்ற உயர் மட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா சபை தொடர்பில் தனது கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் பதிவுசெய்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்