இது தான் இலங்கை வீரருக்கும்..அஸ்வினுக்கும் உள்ள வித்தியாசம்! பட்லரை அவுட் ஆக்கிய வீடியோ

ஐபிஎல் போட்டியில் பட்லரை அஸ்வின் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக்கிய நிலையில், பட்லர் இதற்கு முன்பு இது போன்று அவுட்டாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 12-வது ஐபிஎல் தொடரின் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், ராஜஸ்தான் வீரர் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட்டாக்கினார்.
ஆனால் இதில் முதல் முறை எச்சரித்திருக்க வேண்டும், அதன் பின்னரே அவுட் செய்து அஸ்வின் முறையிட்டிருக்க வேண்டும் என்ற முன்னணி வீரர்கள் பலரும் இந்த அவுட் குறித்து அஸ்வினுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அனைவரும் அஸ்வினை குறை சொல்வதற்கு முன் இந்த வீடியோவை பாருங்கள் என்று பட்லரின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பட்லர் இதோ போன்று தான் அவுட்டாகி வெளியேறியுள்ளார். ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் முதல் முறை அவரை எச்சரித்துள்ளார், அதன் பின் மீண்டும் பந்து வீச வந்த போது பட்லர் கிரீசை விட்டு சென்றதால், அவுட் செய்தார்.
ஏற்கனவே இது போன்று அவுட்டாகியுள்ள பட்லர், இந்த முறையும் எச்சரிக்கை இல்லாமல் அவுட்டாகியிருப்பது அவருடைய தவறு தான் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்