ஜெனிவாவில் தமிழர்களின் பக்க அறை அமர்வில் சரத் வீரசேகர குழுவினர் குழப்பம்!



 ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் வெளியே சென்றுள்ளனர்.
பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு இன்று ஜெனிவாவில் குழு அறையில் பகல் 12 மணியிலிருந்து 1 மணிவரை பசுமைத் தாயக அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குணர் ச.வி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த விசேட உபகுழுக் கூட்டத்திலேயே பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இவர்கள் வெளியேறியுள்ளனர்.


இக் கூட்டத்தில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன், முன்னாள் வட மாகான சபை உறுப்பினர்சிவாஜிலிங்கம், புலம்பெயர் அமைப்புக்களின் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பாதிரியார் இம்மானுவேல், தமிழர் இயக்கம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதிகள் பிரித்தானிய தமிழர் பேரவை... மற்றும் தென்னிலங்கையின் இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் சரத் வீரசேகர தலைமையிலான பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்படவேண்டும்.


என்றும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது விசனமடைந்த இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி சரத் வீரசேகர இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் இராணுவத்தினரே யுத்தத்துக்கு பின்னரான மீட்பு பணிகளை முன்னெடுக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். “
இதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் அமைப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் நிகழ்வில் சர்ச்சை நிலையும் நிலவியுள்ளது.

நிகழ்வை நடத்தியவர்கள் சர்ச்சை நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதிலும் வாக்குவாதம் தொடர்ந்தது.
இதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்