முடி உதிர்தல் பிரச்சினைக்கு முட்டை இப்படி யூஸ் பண்ணுங்க


முட்டை தலைமுடி வளர்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றது.
இன்று அனைவரும் சந்திக்கு பிரச்சினை தான் முடி உதிர்வு. இதற்கு முட்டை பெரிதும் உதவி புரிகின்றது.
ஏனெனில் முட்டையில் புரோட்டின் அதிகம் உள்ளது. இதனால் அவை முடிகளுக்கும் ஸ்கால்ப்பிலும் போஷாக்கு அளித்து, நன்றாக வளரச் செய்கிறது.
அதுமட்டுமின்றி இது வேர்கால்களில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. கூந்தலை பலப்படுத்துகிறது.
அந்தவகையில் தற்போது கூந்தல் பிரச்சினையிலிருந்து விடுபட முட்டையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையானவை
  • முட்டை - 1
  • ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் முட்டை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் ஆலிவ் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்த கலவையினை ஸ்கால்ப்பிலிருந்து நுனி வரை தடவ வேண்டும்.
அரைமணி நேரம் கழித்து அடர்த்தி குறைந்த ஷாம்புவை பயன்படுத்தி கூந்தலை அலசுங்கள்.
முதல் தடவையிலேயே நீங்கள் மாற்றத்தினை காண்பீர்கள். கூந்தல் மிருதுவாய் பளபளப்புடன் காணப்படும்.
நாளடைவில் உங்கள் முடி உதிர்தல் பிரச்சனை நின்று, அடர்த்தியாய் முடி வளர ஆரம்பிக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்