வானத்தில் தோன்றிய திடீர் துளை... ஏலியன்ஸ் பூமிக்கு வரும் வழியா? வைரல் வீடியோ!!வானத்தில் தோன்றிய திடீர் துளையால், மக்கள் அனைவரும் இது வேற்று கிரவாசிகள் பூமிக்கும் வரும் வழியா? என் கேள்வி கேட்டு உள்ளனர். இதற்கான பதிலையும் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்துள்ளனர். 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு நாடுகளில், வானில் வட்ட வடிவில் பெரிய துளை போன்ற உருவம் தோன்றியுள்ளது. இது சார்ஜா, மாஹதா, புராமி, ஓமன் உள்ளிட்ட பகுதிகளிலும் தெரிந்துள்ளது. இது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. 
 
எனவே பலர், இது வேற்று கிரகவாசிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்றும் சிலர் விண்தட்டாக இருக்கும் என்றும் மேலும் சிலர் இதுதான் வேற்று கிரவாசிகள் பூமிக்கு வருவதற்கான வழி என்று கூறி வந்தனர். 
 
ஆனால், இவை மேகங்களில் இருக்கும் நீரின் வெப்பநிலை, உறையும் வெப்பத்தைவிட குறைவாக இருக்கும் போது தோன்றும், fallstreak hole என்னும் இயற்கை நிகழ்வு என விளக்கம் அளித்துள்ளனர். 
 
மேலும் சில நேரங்களில் 50 கிலோ மீட்டர் பரப்பளவில் கூட இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்