உலகமேடையில் விஜய் படத்திற்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்! மேலும் ஒரு படம் - சூப்பர் மொமண்ட்


விஜய் என்றால் இன்று பெரும் மாஸ் இருக்கிறது. சமூகவலைதளங்களில் அதன் தாக்கம் மிகுந்த அளவில் இருப்பதை காணமுடிகிறது. ரசிகர்களும் மிகவும் கொண்டாடுகிறார்கள்.
அட்லீ இயக்கத்தில் கடந்த 2017 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் மெர்சல். படம் எவ்வளவு பெரிய ஓப்பனிங் கொடுத்தது என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.
படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 250 கோடிகளை வசூல் செய்தது. தேனாண்டாள் நிறுவனம் இதை தயாரிக்க படத்தில் விவேக் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடல் பெரும் புரட்சி செய்தது.
இன்னும் ரசிகர்கள் அந்த கொண்டாட்டத்தை மறக்க வில்லை. இந்நிலையில் மெர்சல் படம் சீனாவின் Hainan தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறதாம்.
மார்ச் 23 ல் நடக்கும் இந்த விழாவில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்த பரியேறும் பெருமாள் படம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்