எயார் கனடா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புசிட்னியிலிருந்து மொன்றியலும் நேரடி விமான சேவையொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக, எயார் கனடா விமான சேவை நிறுவனம் தகவல தெரிவித்துள்ளது.
அதன்படி குறித்த விமானம், காலை 6 மணிக்கு ஜே.ஏ. டக்ளஸ் மெக்கர்டி சிட்னி விமான நிலையத்தில் புறப்பட்டு, மொன்றியலின் பியர் எலியட் ட்ரூடியே விமான நிலையத்தை பகல் 1.40 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் ஜூன் மாதம் 28-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 2ஆம் தேதி வரை, இந்த நேரடி விமான சேவையை எயார் கனடா வழங்கவுள்ளது.
இதற்கிடையில், சிட்னியிலிருந்து ஹலிஃபக்ஸ் மற்றும் ரொறான்ரோவிற்கான தினசரி விமான சேவை இந்த கோடை காலத்தில் குறைக்கப்பட்டுள்ளது. மூன்று அல்லது இரண்டு நாட்கள் குறித்த சேவையை வழங்க எயார் கனடா தீர்மானித்து குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

0 கருத்துகள்