சென்னை ஆடுகளம் படுமோசம்! ஐபிஎல்-லின் முதல் போட்டிக்கு பின்னர் அதிருப்தி தெரிவித்த டோனி மற்றும் கோஹ்லி


சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் படுமோசமாக இருந்ததாக சென்னை அணி கேப்டன் டோனி மற்றும் பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
ஆனால், இமாலய சிக்சர்களுக்கு பெயர் போன ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை ஆடுகளத்தின் மோசமான தன்மையால், விறுவிறுப்பு குறைந்தது.
இதுகுறித்து டோனி கூறுகையில், சென்னை ஆடுகளம் இவ்வளவு மந்தமாக செயல்படும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
மைதானத்தில் ஈரப்பதம் இருந்த போது சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்தது என்றார்.
கோஹ்லி கூறுகையில், இந்த அளவு ஆடுகளம் இருக்கும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. குறைந்தது 140-150 ரன்கள் எடுப்போம் என எதிர்பார்த்தோம்.


ஆனால் ஆடுதளத்தின் தன்மை தெரியாததும், முதலில் பேட்டிங் செய்ததும் எங்கள் அணிக்கு சாதகமாக அமையவில்லை என கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்