மீண்டும் பயங்கரக் குண்டுத் தாக்குதல்! அதிகரித்தது சாவு எண்ணிக்கை!!


சோமாலிய தலைநகர் Mogadishu வில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் முதற் கட்ட தகவலாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 பேர் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உயிரிழப்பு 16 ஆக அதிகரித்துத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் நேற்று முற்பகல் நடாத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்து, காயமடைந்த மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சோமாலிய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்