நியூசிலாந்து தீவிரவாதி ஏன் துப்பாக்கி சூடு நடத்தினான் தெரியுமா?


நியூசிலாந்து துப்பாக்கி சூடு புலம் பெயர்வோரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நான் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஏழை.... எமக்கானதை நான் உணர்கிறேன். இவர்கள் எமது பூமியை ஆக்கிரமிக்கிறார்கள். இந்த பூமி (நாடு) அவர்களுடையதல்ல. எமது தாய் நாடு எமக்கு உரித்தானது. வெள்ளை இனத்தவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இவர்களால் எம்மை அடிமைப்படுத்தவோ அல்லது எம்மை அகற்றவோ முடியாது." என
- Brenton Tarrant தெரிவித்துள்ளார்.
மேலே உள்ள அவனது வார்த்தைகள் ஒரு இனத்தை குறி வைத்ததாக இல்லை. புலம் பெயர்ந்து அவர்களது நாடுகளுக்கு வருவோரை குறி வைத்ததாகவே உணர முடிகிறது.
மேலும் அவன் 2017ம் ஆண்டு Stockholmல் நடந்த Ebba Akerlund என்ற 11 வயது சிறுமியின் சாவு தன்னை ஒரு பயங்கரவாதியாக மாற்றியது என பிரென்டொன் வெளியிட்டுள்ள 73 பக்கங்கள் அடங்கிய Twitter தகவலில் ஓரிடத்தில் தெரிவித்துள்ளான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்