இலங்கைக்கு படையெடுத்துள்ள ஆஸி யுத்தக்கப்பல்கள்!


இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை என்பவற்றுக்கிடையே நல்லிணக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் நான்கு யுத்தக் கப்பல்கள் இன்று (23) இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் கடற்படைக்குச் சொந்தமான எச்.எம்.ஏ.எஸ். ஸக்ஸஸ், எம்.எம்.எஸ். பெரமெடா ,எச்எம்.ஏ.எஸ். கென்பரா மற்றும் நியூ கஸ்ரில் ஆகிய நான்கு கப்பல்களே இலங்கைக்கு வருகை தந்துள்ளன.
இந்த கப்பல்களில் அவுஸ்திரேலிய கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவப்படை என்பவற்றைச் சேர்ந்த சுமார் 1000 இற்கும் அதிகமான படை வீரர்கள் இலங்கை வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த வகையில், அவுஸ்திரேலியாவின் கடற்படைக்குச் சொந்தமான எச்.எம்.ஏ.எஸ். ஸக்ஸஸ் மற்றும் எம்.எம்.எஸ். பெரமெடா ஆகிய கடற்படை யுத்தக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு இன்று (23) வருகை தந்துள்ளன.
அத்துடன், அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான எச்எம்.ஏ.எஸ். கென்பரா ,நியூ கஸ்ரில் ஆகிய இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்