மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வில் எங்கோ தவறு நடந்திருக்கின்றது


மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு முடிவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதில் ஏதோ தவறு உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மனிதப் புதைகுழி விடயத்தில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பாக நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எச்சங்கள் 500 வருடத்திற்கு முற்பட்டவை என கார்பன் பரிசோதனை அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் தற்போது இங்கு பெறப்பட்டுள்ள மனித எச்சங்கள் 50 வருடங்களுக்கு உட்பட்டவை என பரசீலித்துக் கூறுகின்றனர்.
எவ்வாறு இது சாத்தியப்படும்? இதில் எங்கேயோ முக்கியமான பாரதூரமான தவறு நடந்திருக்கிறது. எனவே மனித எச்சங்கள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்