இவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்


தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர் மேகா ஆகாஷ். ஆனால் 3 வருடங்கள் ஆகியும் அந்த படம் திரைக்கு இன்னும் வரவில்லை. அதனால் சமீபத்தில் திரைக்கு வந்த பூமராங் படம் தான் மேகா ஆகாஷுக்கு தமிழில் முதல் படம் என்று சொல்லலாம்.
இந்நிலையில் மேகா ஆகாஷ் தற்போது ஒரு விழாவுக்கு சென்றபோது விஜய், அஜித், தல தோனி பற்றி பேசியுள்ளார்.
"அஜித்தை நேரில் பார்த்தால் 'எப்படி இவ்ளோ ஹண்ட்ஸமாக இருக்கிறீர்கள்?' என கேட்பேன். விஜய்யை நேரில் பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லி கொடுங்கள் என கேட்பேன். தல தோனியை நேரில் பார்த்தால் 'ஐ லவ் யூ' என்று உடனே கூறிவிடுவேன்" என மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்