யாழில் இருந்திருந்தால் புலிகளின் தலைவராகியிருப்பேன்! தென்னிலங்கை அரசியல் பிரபலம்..


நான் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு தலைவராக இருந்திருப்பேன் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தன்னிடம் கூறினார் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னதாக தனது ஊடக அனுபவம் குறித்து ஊடகவியலாளர்களுடன் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார் என தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நான் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் நேர்காணல்கள் பலவற்றைச் செய்துள்ளேன், அந்த சமயம் யாருக்கும் நேர்காணல் வழங்காத அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல எனக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். 20 நிமிடங்கள் என்று ஒதுக்கி ஆரம்பித்த நேர்காணல் 49 நிமிடங்கள் வரை நீடித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தான் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து அதன் தலைவராக வந்திருப்பேன் என்று என்னிடம் கூறினார் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்